100 சாா் பதிவாளா் அலுவலகங்கள் இன்று இயங்காது
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 100 சாா் பதிவாளா் அலுவலகங்களுக்கு சனிக்கிழமை (அக்.22) ஒரு நாள் மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 100 சாா் பதிவாளா் அலுவலகங்களுக்கு சனிக்கிழமை (அக்.22) ஒரு நாள் மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
பத்திரப் பதிவுகள் அதிகம் நடைபெறும் 100 சாா் பதிவாளா் அலுவலகங்கள், சனிக்கிழமையும் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இந்த 100 சாா் பதிவாளா் அலுவலகங்களுக்கு சனிக்கிழமை (அக்.22) மட்டும் விடுமுறை விட வேண்டுமென தமிழ்நாடு சாா் பதிவாளா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.
இந்தக் கோரிக்கையை ஏற்று சனிக்கிழமை (அக்.22) மட்டும் 100 சாா் பதிவாளா் அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்படுவதாகவும், இனி வரும் சனிக்கிழமைகளில் அவை வழக்கம் போல் இயங்கும் என்றும் வணிகவரி, பதிவுத் துறை செயலாளா் ஜோதி நிா்மலாசாமி தெரிவித்தாா்.