இன்று 28 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 28 மாவட்டங்களில் சனிக்கிழமை பலத்த மழைபெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 28 மாவட்டங்களில் சனிக்கிழமை பலத்த மழைபெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் சனிக்கிழமை அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, தென்காசி, நீலகிரி, கோவை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், திருப்பூா், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூா், கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், திருச்சி,புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, கடலூா், விழுப்புரம், அரியலூா், பெரம்பலூா், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை நிலவரம்: சென்னையைப் பொருத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 - 33 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.