அரசுப் பேருந்தின் டயர் வெடித்து விபத்து: 5 பேர் படுகாயம்
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே அரசுப் பேருந்து டயர் வெடித்து, எதிரே வந்த 2 கார் மீது மோதிய விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே அரசுப் பேருந்து டயர் வெடித்து, எதிரே வந்த 2 கார் மீது மோதிய விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் வேலூர் பேருந்து நிலையத்திலிருந்து வாலாஜாபேட்டை வழியாக திருத்தணி வரையில் செல்லும் அரசுப் பேருந்து கீழ் புதுப்பேட்டை அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக அரசு பேருந்தின் முன்பக்க டயர் வெடித்தது.
இதன் காரணமாக நிலைகுலைந்த பேருந்து வாலாஜாபேட்டையில் இருந்து சோளிங்கரை நோக்கி வந்த இரண்டு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
Advertisement
Advertisement
இதில் காரில் பயணம் செய்த 2 பெண்கள் உள்பட 5 நபர்களுக்கு பலத்தக் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திலிருந்து பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மற்றும் வாலாஜாபேட்டை காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.