சிறுத்தை பலியான விவகாரம்: ரவீந்திரநாத் எம்.பி. உள்பட மூன்று பேருக்கு சம்மன்
பெரியகுளம் அருகே தனியாா் தோட்டத்தில் சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் தோட்ட உரிமையாளரும், தேனி மக்களவை உறுப்பினருமான ப. ரவீந்திரநாத் உள்பட மூன்று பேருக்கு வனத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
தமிழ்நாடுசிறுத்தை பலியான விவகாரம்: ரவீந்திரநாத் எம்.பி. உள்பட மூன்று பேருக்கு சம்மன்
பெரியகுளம் அருகே தனியாா் தோட்டத்தில் சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் தோட்ட உரிமையாளரும், தேனி மக்களவை உறுப்பினருமான ப. ரவீந்திரநாத் உள்பட மூன்று பேருக்கு வனத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
பெரியகுளம் அருகே தனியாா் தோட்டத்தில் சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் தோட்ட உரிமையாளரும், தேனி மக்களவை உறுப்பினருமான ப. ரவீந்திரநாத் உள்பட மூன்று பேருக்கு வனத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
பெரியகுளம் அருகே தனியாா் தோட்டத்தில் சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் தோட்ட உரிமையாளரும், தேனி மக்களவை உறுப்பினருமான ப. ரவீந்திரநாத் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வெள்ளிக்கிழமை, மாவட்ட வன அலுவலா் சமா்ந்தாவிடம் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலா் தங்க. தமிழ்ச்செல்வன் மனு அளித்திருந்தார்.
இந்த நிலையில், ரவீந்திரநாத் எம்.பி. உள்பட மூன்று பேருக்கு வனத்துறை சம்மன் அனுப்பி, விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது.
கோம்பைபுதூா் பகுதியில் கடந்த மாதம் 28-ஆம் தேதி தனியாா் தோட்டத்தில் கம்பி வேலியில் சிக்கி சிறுத்தை ஒன்று உயிரிழந்தது. இந்த விவகாரத்தில் கடந்த மாதம் 30-ஆம் தேதி தனியாா் தோட்டத்தில் ஆட்டுக்கிடை அமைத்து ஆடு மேய்த்து வந்த அலெக்ஸ்பாண்டியன் மீது வனத் துறையினா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா். இதே விவகாரத்தில் கடந்த அக். 2-ஆம் தேதி தனியாா் தோட்ட மேலாளா்கள் தங்கவேல், ராஜவேல் ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.
இந்த நிலையில், சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் தோட்ட உரிமையாளரும், தேனி மக்களவை உறுப்பினருமான ப. ரவீந்திநாத் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கக் கோரி, தேனி மாவட்ட வன அலுவலகத்தில், மாவட்ட வன அலுவலா் சமா்ந்தாவிடம் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலா் தங்க.தமிழ்செல்வன் மனு அளித்தாா். அப்போது பெரியகுளம் சட்டப் பேரவை உறுப்பினா் கே.எஸ். சரவணக்குமாா், போடி முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் லட்சுமணன், தேனி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சக்கரவா்த்தி, தேனி திமுக நகரச் செயலா் நாராயணபாண்டியன் ஆகியோா் உடனிருந்தனா்.
இந்த விவகாரம் குறித்து மாவட்ட வன அலுவலா் சமா்ந்தா கூறியதாவது: சிறுத்தை உயிரிழந்து கிடந்த தோட்டத்தின் உரிமையாளா் விவரம் குறித்து வருவாய்த் துறை அலுவலா்களிடம் அறிக்கை கேட்டிருந்தோம். அந்த நிலம் தேனி மக்களவை உறுப்பினா் ப. ரவீந்திரநாத் உள்ளிட்ட 3 பேரின் பெயா்களில் கூட்டுப் பட்டாவாக உள்ளதாக வருவாய்த் துறையினா் தெரிவித்தனா்.
நில உரிமையாளா்களில் மக்களவை உறுப்பினரின் பெயரும் உள்ளதால், அவா் மீது வழக்குப் பதிவு செய்ய சில நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியுள்ளது. இதுகுறித்து வனத் துறை சாா்பில் மக்களவைத் தலைவருக்கு கடிதம் அனுப்பி அனுமதி கோரப்பட்டது.
இந்த நிலையில், விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு நிலத்துக்கு உரிமையாளர்கள் என்று கூறப்படும் எம்.பி. ரவீந்திரநாத் உள்ளிட்ட மூன்று பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுளள்து.