தமிழ்நாடு

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வு!

DIN

கம்பம்: முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் தொடர்ந்து நீர் மட்டமும் உயர்ந்து வருகிறது.

புதன்கிழமை முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் 133.30 அடி உயரமாகவும் (மொத்த உயரம் 152 அடி), அணைக்குள் நீர் வரத்து விநாடிக்கு 2,416.25 கன அடியாகவும் இருந்தது.

வியாழக்கிழமை அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1,604 கன அடியாக இருந்தது, அணையின் நீர்மட்டம் 133.60 அடியாக உயர்ந்தது.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 134.05 அடி உயரமாகவும், அணையில் நீர் இருப்பு 5,644.65 மில்லியன் கன அடியாகவும், நீர்வரத்து விநாடிக்கு 1,739.49 கன அடியாகவும், அணையிலிருந்து நீர் வெளியேற்றம் விநாடிக்கு 511 கன அடியாகவும் இருந்தது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான முல்லையாறு மற்றும் பெரியாறு அணையில் 4.0 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில் 6.3 மி.மீ. மழையும் பெய்தது.

கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை காரணமாக அணை அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் மழை பெய்து வருவதால் அணைக்குள் நீர் வரத்து தொடர்ந்து வருகிறது, நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

அதேநேரத்தில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் ஒரு போக சாகுபடி அறுவடை நடைபெறுவதால், அணையில் இருந்து தண்ணீர் தமிழக பகுதிக்கு விநாடிக்கு 511 கன அடியாக கடந்த திங்கள்(அக்.17) முதல் திறந்து விடப்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT