தமிழ்நாடு

விபத்தில் சிக்கியவரை வாகனத்திலிருந்து இறங்கி வந்து உதவிய முதல்வர்!

சென்னை அண்னா சாலையில் விபத்தில் சிக்கியவரை உடனடியாக வாகனத்திலிருந்து இறங்கி வந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உதவினார்.

DIN

சென்னை அண்னா சாலையில் விபத்தில் சிக்கியவரை உடனடியாக வாகனத்திலிருந்து இறங்கி வந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உதவினார்.

இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை, அண்ணாசாலை, டி.எம்.எஸ். மெட்ரோ இரயில் நிலையம் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சூளைமேட்டை சேர்ந்த  அருள்ராஜ் என்பவர் சாலையில் எதிர்பாரதவிதமாக தடுமாறி விழுந்து தலையில் காயம் ஏற்பட்டது

இந்நிலையில், அவ்வழியே தலைமைச் செயலகத்திலிருந்து அண்ணா சாலை வழியாக சென்று கொண்டிருந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இவ்விபத்தினை கண்டு உடனடியாக கான்வாய் வாகனத்தை நிறுத்தி, இறங்கி சென்று, காயமடைந்தவரை ஆட்டோ ஒன்றில் ஏற்றி, இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு காவலர் ஒருவருடன் அனுப்பி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா. எழிலன் அவர்களை அலைபேசியில் தொடர்பு கொண்டு, உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று காயமடைந்த அருள்ராஜ் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதிசெய்யுமாறு அறிவுறுத்தினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்குகளைத் திருடியே வெற்றி பெறுகிறார் மோடி; ஆதாரத்துடன் வெளிக்காட்டுவோம்! -ராகுல் சவால்

மகாராஷ்டிரம் - சத்தீஸ்கர் எல்லையில்.. 4 நக்சல்கள் சுட்டுக்கொலை!

இனிய தொடக்கம்... காவ்யா அறிவுமணி!

ஹரிஷ் கல்யாணின் டீசல் டீசர்!

விநாயகர் சதுர்த்தி... ஐஸ்வர்யா மேனன்!

SCROLL FOR NEXT