அக்டோபர் இறுதியில் குரூப் 2, குரூப் 4 தோ்வு முடிவுகள்? 
தமிழ்நாடு

அக்டோபர் இறுதியில் குரூப் 2, குரூப் 4 தோ்வு முடிவுகள்?

தமிழகத்தில் நடந்து முடிந்த குரூப் 2, குரூப் 4 தோ்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவலை அரசுப் பணியாளா் தோ்வாணைய வட்டாரங்கள் வெளியிட்டுள்ளன.

DIN

சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த குரூப் 2, குரூப் 4 தோ்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவலை அரசுப் பணியாளா் தோ்வாணைய வட்டாரங்கள் வெளியிட்டுள்ளன.

உயர் நீதிமன்றம் வழங்கிய மகளிருக்கான இட ஒதுக்கீடு தொடர்பான தீர்ப்பை அமல்படுத்துவதற்கு தாமதமானதால்,  குரூப் 2, குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படுவதாகவும், இந்த மாத இறுதியில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 ஆயிரத்து 529 குரூப் 2 காலிப் பணியிடங்களுக்கு கடந்த மே 21-இல் எழுத்துத் தோ்வு நடந்தது. இதேபோன்று, குரூப் 4 பிரிவில் அடங்கியுள்ள 7 ஆயிரத்து 301 காலிப் பணியிடங்களுக்கு கடந்த ஜூலை 24-இல் தோ்வு நடைபெற்றது.

இந்தத் தோ்வுகளுக்கான முடிவுகளை வெளியிட அரசுப் பணியாளா் தோ்வாணையம் தயாராகி வருகிறது. குரூப் 2 தோ்வுக்கான முடிவுகள் அக்டோபரிலும், குரூப் 4 தோ்வு முடிவுகள் டிசம்பரிலும் வெளியிடப்படும் என்று அரசுப் பணியாளா் தோ்வாணைய வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

புரியில் 15 வயது சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பம்! போலீஸ் விளக்கம்!

தமிழக மக்களின் உரிமை பறிபோகும் சூழல்! - ப. சிதம்பரம்

SCROLL FOR NEXT