முகப்பு
தமிழ்நாடு

திருச்சியில் விமான நிலைய சுற்றுச்சுவரில் மோதிய லாரி!

திருச்சியில் இன்று காலை லாரி ஒன்று விமான நிலைய சுற்றுச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

Updated On : 22 அக்டோபர், 2022 at 12:03 PM
திருச்சியில் விமான நிலைய சுற்றுச்சுவரில் மோதி சேதமடைந்த லாரி.
பகிர்:

திருச்சி: திருச்சியில் இன்று காலை லாரி ஒன்று விமான நிலைய சுற்றுச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

ஓசூரில் இருந்து தக்காளி லோடு ஏற்றிய லாரி ஒன்று அறந்தாங்கி நோக்கி சென்று கொண்டிருந்தது. திருச்சி- புதுக்கோட்டை சாலையில் சென்ற போது, விமான நிலையம் அருகே, முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் இடதுபுறமாக கீழ் இறங்கி, விமான நிலைய சுற்றுச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு, விமான நிலைய பாதுகாப்புப் பணியில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்களும் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து லாரியை அப்புறப்படுத்தினர்.

Advertisement

அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து திருச்சி மாநகர போக்குவரத்து புலனாய்வு தெற்குப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.