குறையும் மழை: மேட்டூர் அணை நிலவரம்!
காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 85,000கன அடியாக நீடிப்பு.
மேட்டூர்: காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 85,000கன அடியாக நீடிப்பு.
காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த மழை அளவு குறைந்ததால், நேற்று மாலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 85,000 கனாடியாக குறைந்தது.
இன்று காலை இரண்டாவது நாளாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 85,000 கனாடியாக நீடித்து வருகிறது . அணைக்க வரும் நீரின் அளவு சரிந்ததால் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் வினாடிக்கு 85,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 21,500 கன அடி நீரும் உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 63,500 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 200கானா அடியாக குறைக்கப்பட்டுள்ளது. இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120அடியாகவும் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் உள்ளது.