தமிழ்நாடு

தீபாவளி: 5.63 லட்சம் பேர் அரசுப் பேருந்துகளில் வெளியூர் பயணம்

DIN

தீபாவளியையொட்டி சென்னையிலிருந்து 3 நாள்களில் 10,325 அரசுப் பேருந்துகளில் 5,63,541 பயணிகள் வெளியூர் சென்றுள்ளனர்.

தீபாவளி பண்டிகை இன்று தமிழகம் உள்பட நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு ஊா்களில் வசிப்பவா்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட அவா்களது சொந்த ஊா்களுக்குச் செல்வது வழக்கம். 

தீபாவளிக்கு முந்தைய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள்கள் என்பதால், சொந்த ஊா்களுக்கு அதிக எண்ணிக்கையில் பயணிகள் சென்றனர். இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 16,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. 

இந்த நிலையில் தீபாவளியையொட்டி சென்னையிலிருந்து 3 நாள்களில் 10,325 அரசுப் பேருந்துகளில் 5,63,541 பயணிகள் வெளியூர் சென்றதாக போக்குவரத்துறை தெரிவித்துள்ளது. அதேசமயம் இதுவரை 1,85,052 பயணிகள் அரசுப் பேருந்துகளில் வெளிர் செல்ல முன்பதிவு செய்துள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்கன் கனமழை: 68 போ் உயிரிழப்பு

சென்னை போராட்டம் வீண்: பிளே ஆஃப்பில் பெங்களூரு

இறுதிச் சுற்றில் சாத்விக்-சிராக் ஷெட்டி

இறுதிச் சுற்றில் அலெக்ஸ் வெரேவ்-நிக்கோலஸ் ஜேரி மோதல்

கேரளத்தில் அதிபலத்த மழைக்கு வாய்ப்பு: சில மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை

SCROLL FOR NEXT