தமிழ்நாடு

கோயம்பேடு சந்தை நாளை இயங்காது

தீபாவளி விடுமுறை காரணமாக கோயம்பேடு சந்தை நாளை செயல்படாது என கோயம்பேடு காய்கறி அங்காடி அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜி.டி.ராஜசேகரன் அறிவித்துள்ளார். 

DIN

தீபாவளி விடுமுறை காரணமாக கோயம்பேடு சந்தை நாளை செயல்படாது என கோயம்பேடு காய்கறி அங்காடி அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜி.டி.ராஜசேகரன் அறிவித்துள்ளார். 

தீபாவளி பண்டிகை திங்கள் கிழமை இன்று (அக்.24) கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோயம்பேடு சந்தையில் கூலித் தொழிலாளர்களாகப் பணிபுரிந்த பலரும் தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். 

இந்நிலையில், பேசிய கோயம்பேடு காய்கறி அங்காடி அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜி.டி.ராஜசேகரன், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் தீபாவளி கொண்டாட்டத்தில் இருப்பார்கள் என்பதால் நாளை கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.

மேலும், லாரி ஓட்டுநர்களும் சுமை தூக்கும் தொழிலாளர்களும் தீபாவளி விடுமுறையில் சென்றுள்ளதால் நாளை கோயம்பேடு சந்தையில் எந்தப் பணிகளும் நடைபெறாது என சுட்டிக்காட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருப்பு, வெள்ளை... அஸ்லி மோனலிசா

நினைவுகள்... சுதா

கலைமாமணி விருது பெற்ற திரைக் கலைஞர்கள்! | Tamil Cinema | TNGovt | Award

ஆஸ்திரேலியாவில் சிறியரக விமானம் விபத்து: 3 பேர் பலி

என்ன சுகம் பாடல்!

SCROLL FOR NEXT