தமிழ்நாடு

அக்.29-ல் தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை!

DIN

தமிழகத்தில் அக்.29-ல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில், 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்.29-ம் தேதி தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக் கண்ணன் அறிவித்துள்ளார். 

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

மேலும், அக்டோபர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 20 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார். 

சென்னையை பொருத்தவரை

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குண்டா் தடுப்புக் காவலில் ஒருவா் கைது

சேவாலயா மாணவிகளுக்கு ரூ.27.12 லட்சத்தில் கல்வி உபகரணங்கள்

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT