தமிழ்நாடு

தமிழகத்தில் நாளை மறுநாள் தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை!

DIN

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் சென்னையில் அளித்த பேட்டியில், 

தமிழகத்தில் அக்.29 வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுகிறது.

சித்ரங் புயல் உருவானதால் வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் இந்தாண்டு தாமதம் ஏற்பட்டுள்ளது. 

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நவம்பர் 4-ம் தேதி வரை படிப்படியாக மழை அதிகரிக்கும்.

தென்மேற்கு பருவ மழை இந்தாண்டு இயல்பை விட 45 சதவீதம் அதிகமாகப் பதிவாகியுள்ளதாக அவர் கூறினார். 

சென்னையை பொருத்தவரை

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT