சென்னை: ஆழியாறு அணையிலிருந்து 2400 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து நீர்வளத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில், கோயம்புத்தூர் மாவட்டம், பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம், ஆழியாறு படுகையில், பொள்ளாச்சி கால்வாய் ”அ” மண்டலம், வேட்டைக்காரன்புதூர் கால்வாய் ”ஆ” மண்டலம் சேத்துமடை கால்வாய் ”அ” மண்டலம் மற்றும் ஆழியாறு ஊட்டு கால்வாய் ”அ” மண்டலப் பாசனப் பகுதிகளுக்கு 28.10.2022 முதல் 24.02.2023 முடிய உள்ள 120 நாள்கள் பாசன காலத்தில் மொத்தம் 75 நாள்களுக்கு உரிய இடைவெளிவிட்டு, ஆழியாறு அணையிலிருந்து 2400 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிக்க.. ஏன் குரங்குகளைப் போல தாவி வருகிறீர்கள்? செய்தியாளர்களை தரக்குறைவாக பேசிய அண்ணாமலை (விடியோ)
இதனால் கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை வட்டங்களிலுள்ள 22116 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.