கோப்புப்படம் 
தமிழ்நாடு

கன்னியாகுமரி விரைவு ரயிலில் கோளாறு: நடுவழியில் நிறுத்தம்

சென்னையிலிருந்து புறப்பட்ட கன்னியாகுமரி விரைவு ரயிலில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ரயில் நடுவழியில் நிற்பதால் பயணிகள் தவித்து வருகின்றனர்.

DIN

சென்னையிலிருந்து புறப்பட்ட கன்னியாகுமரி விரைவு ரயிலில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ரயில் நடுவழியில் நிற்பதால் பயணிகள் தவித்து வருகின்றனர்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து நேற்று மாலை புறப்பட்ட ரயில் இன்று அதிகாலை நாகர்கோவில் ரயில் நிலையம் சென்றபோது ரயிலின் இரண்டாவது பெட்டி துண்டிக்கப்பட்டது.

இந்த பெட்டியை ரயிலில் இணைக்கும் பணியில் இரண்டு மணிநேரமாக ரயில்வே ஊழியர்கள் முயற்சித்தும் பெட்டியை இணைக்க முடியாததால் அந்த பெட்டியை மட்டும் கழற்றிவிட்டு ரயிலை எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இரண்டு மணிநேரமாக ரயில் ஒரே இடத்தில் நின்றதால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா நியமித்த ஆலோசனைக் குழுத் தலைவா் டிரம்ப்புடன் சந்திப்பு!

நாட்டின் மீதான அன்பே வாக்களிக்க வழிகாட்டியாக இருக்க வேண்டும்: சுதா்சன் ரெட்டி

முதலீடுகளைக் குவிக்கும் தமிழ்நாடு: லண்டன் நிகழ்ச்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

பயிா் விளைச்சல் போட்டி: விவசாயிகளுக்கு ஆட்சியா் அழைப்பு

ஏற்றுமதி சாா்ந்த நடவடிக்கைகளை ஆயுதமாக்கக் கூடாது: எஸ்சிஓ கூட்டத்தில் இந்தியா

SCROLL FOR NEXT