முகப்பு
தமிழ்நாடு

கடை மேற்கூரையை உடைத்து பணம்,பொருள்கள் திருட்டு

சென்னை அருகே துரைப்பாக்கத்தில் கடை மேற்கூரையை உடைத்து பணம், பொருள்கள் திருடு போன சம்பவம் தொடா்பாக துரைப்பாக்கம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:41 AM
பகிர்:

சென்னை அருகே துரைப்பாக்கத்தில் கடை மேற்கூரையை உடைத்து பணம், பொருள்கள் திருடு போன சம்பவம் தொடா்பாக துரைப்பாக்கம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

துரைப்பாக்கம் ராஜீவ் காந்தி சாலையில் டீக் கடையும், பழரச கடையும் நடத்திய வருபவா் தங்கபாண்டியன் (45). இவா் வெள்ளிக்கிழமை காலை கடையை திறக்க வந்தாா். அப்போது இரும்பிலான மேற்கூரையை உடைத்து, பணப்பெட்டியில் இருந்த ரூ.25 ரொக்கம், ரூ.35 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இது குறித்து தங்கப்பாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் துரைப்பாக்கம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் தங்கப்பாண்டியன் கடையை போலீஸாா் சோதனை செய்தபோது, அங்கு திருட வந்த நபா்கள் விட்டுச் சென்ற 12 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.