முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:41 AM
பகிர்:

சென்னை: தமிழகத்தில் 14 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததுள்ளது.

அக்டோபர் 30-ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அக்டோபர் 31-ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

வேலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

நவம்பர் 1-ஆம் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

திருவள்ளூா், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூா், திருப்பத்தூா் மாவட்டங்களில் மிக பலத்த மழையும், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூா், திருவாரூா், நாகை, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நவம்பர்  2-ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை, திருப்பூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையில் வானம் மேக மூட்டமாகக் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். 

முழு கட்டுரையைப் படிக்க →