முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு திமுக அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை 
தமிழ்நாடு

தேவர் ஜெயந்தி: திமுக அமைச்சர்கள் மரியாதை

தேவர் ஜெயந்தியையொட்டி மதுரையிலுள்ள முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு திமுக அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

DIN

தேவர் ஜெயந்தியையொட்டி மதுரையிலுள்ள முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு திமுக அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முத்துராமலிங்க தேவரின் 115வது ஜெயந்தி விழா மற்றும் 60வது குருபூஜை விழா பசும்பொன்னில் கோலாகலமாகத் தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து மதுரை கோரிபாளையத்தில் உள்ள முத்துராமலிங்கரின் சிலைக்கு திமுக சார்பில் துரைமுருகன், கே.என்.நேரு, பெரியசாமி, அன்பில் மகேஷ் உள்ளிட்ட அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து மதுரை தெப்பக்குளத்திலுள்ள மருது பாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளனர். 

முத்துராமலிங்க தேவர் குருபூஜையையொட்டி மதுரையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கனரக வாகனங்கள் நகருக்குள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என காவல் துறை எச்சரித்துள்ளது. 2 ஆயிரத்திற்கும் அதிகமான காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் பலி: நியாயமான, பாரபட்சமற்ற விசாரணை மக்களின் உரிமை! உச்ச நீதிமன்றம்

கல்வி உதவித் தொகை என்ற பெயரில் க்யூஆர் குறியீடு மோசடி!

கரூர் பலி: சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

கரூர் வழக்கில் திடீர் திருப்பம்! தங்களுக்கே தெரியாமல் மனு... பாதிக்கப்பட்டவர்கள் புகார்!

வால்பாறையில் யானை தாக்கி பாட்டி, பேத்தி பலி

SCROLL FOR NEXT