தமிழ்நாடு

சென்னையில் தேவர் சிலைக்கு திமுக சார்பில் மரியாதை!

தேவர் ஜெயந்தியையொட்டி சென்னையில் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு திமுக சார்பில் மரியாதை செய்யப்பட்டது. 

DIN

தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையையொட்டி சென்னையில் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு திமுக சார்பில் மரியாதை செய்யப்பட்டது. 

முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள படத்திற்கு மலர் தூவி திமுகவினர் மரியாதை செலுத்தினர். 

முத்துராமலிங்க தேவரின் 115வது ஜெயந்தி விழா மற்றும் 60வது குருபூஜை விழா பசும்பொன்னில் கோலாகலமாக இன்று (அக்.30) தொடங்கியது. அதனைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் தேவர் ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்தவகையில், மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு திமுக மூத்த அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

இதேபோன்று சென்னை நந்தனத்திலுள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், செய்தித் துறை அமைச்சர்  சாமிநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு, மாநகராட்சி ஆணையர் பிரியா உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழில் சங்கங்களால் நாட்டின் வளர்ச்சி பாதிப்பு..! -உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

தொடரும் காஷ்மீர் வணிகர்கள் மீதான வன்முறைகள்! உத்தரகண்டில் கும்பல் தாக்குதலில் 17 வயது சிறுவன் படுகாயம்!

அமெரிக்க தூதருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!

அஜீத் பவாரின் இறுதிச் சடங்கில் அனுமதியின்றி பறந்த ட்ரோன்கள்! சிறைப்பிடித்த போலீஸ்!

வேளாண் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்: இந்தியா - கனடா அமைச்சர்கள் பேச்சு!

SCROLL FOR NEXT