முகப்பு
தமிழ்நாடு

கம்பம், கூடலூர் பகுதிகளில் கந்தர் சஷ்டி விழா: பால்குட ஊர்வலம்

தேனி மாவட்டம் கம்பம், கூடலூர் பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் கந்தர் சஷ்டி விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:42 AM
கந்தர் சஷ்டி விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பால்குட ஊர்வலம்.
பகிர்:

கம்பம்: தேனி மாவட்டம் கம்பம், கூடலூர் பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் கந்தர் சஷ்டி விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

தேனி மாவட்டம் கம்பத்தில் சுருளி வேலப்பர், கம்பராயப்பெருமாள் கோயில் வளாகத்தில் உள்ள சண்முகநாதன், கூடலூரில் உள்ள கூடல் சுந்தரவேலவர், லோயர்கேம்ப் வழிவிடும் முருகன் ஆகிய கோயில்களில் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு பால்குட ஊர்வலம் நடைபெற்றது. 

இதில், ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் பால்குடம் சுமந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோயில் வந்தனர். 

முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →