மேட்டூர் அணை நீர்வரத்து 10,000 கன அடியாக சரிவு!
மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக சரிந்து வருகிறது.
மேட்டூர்: காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக சரிந்து வருகிறது.
நேற்று மாலை வினாடிக்கு 10,000கன அடியாக வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று காலை 2வது நாளாக வினாடிக்கு 10,000கன அடியாக நீடிக்கிறது.
இன்று காலை 19-வது நாளாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும் நீர் இருப்பு 93.47டிஎம்சி ஆகவும் உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடி 10,000கன அடியாக சரிந்தது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கன அடி வீதம் நீர் மின் நிலையங்கள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 750 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.