முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை: நீர்வரத்து 15,000 கன அடியாக  அதிகரிப்பு!

மேட்டூர் அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து  வினாடிக்கு 15,000 கன அடியாக  அதிகரித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:42 AM
மேட்டூர் அணை (கோப்புப் படம்)
பகிர்:

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து  வினாடிக்கு 15,000 கன அடியாக  அதிகரித்துள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் லேசான மழை பெய்து வருவதால்  மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு  நேற்று முன் தினம் மாலை முதல் வினாடிக்கு 14,000கன அடியாகவும்,நேற்று மாலை வினாடிக்கு  15,000 கன அடியாகவும் அதிகரித்துள்ளது.

நேற்று மாலை 20-வது நாளாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும் நீர் இருப்பு 93.47 டிஎம்சி ஆகவும் உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து   வினாடிக்கு 15,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு  15,000 கன அடியாக அதிகரித்து  நீர் மின் நிலையங்கள் வழியாக தண்ணீர்  திறக்கப்பட்டு வருகிறது.

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 750 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →