தமிழ்நாடு

கார்த்தி சிதம்பரத்துடன் பாஜக தலைவர் அண்ணாமலை செல்ஃபி

காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்துடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம் கவனம் பெற்றுள்ளது.

DIN

காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்துடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம் கவனம் பெற்றுள்ளது.

மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவின் முக்கிய எதிர்க்கட்சியாக காங்கிரஸ் கட்சி உள்ளது. பாஜகவின் திட்டங்களை விமர்சிக்கும் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் எனும் நோக்கில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. 

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி பாஜகவை எதிர்ப்பதில் மும்முரம் காட்டி வருகிறது. 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்துடன் தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. 

கோவை விமான நிலையத்தில் ஏற்பட்ட திடீர் எதிர்பாராத சந்திப்பில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்த்தி சிதம்பரம் அவ்வப்போது தெரிவிக்கும் கருத்துகள் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே விமர்சனத்துக்குள்ளாகிவரும் பாஜக தலைவர் அண்ணாமலையுடனான செல்ஃபி கவனம் பெற்றுள்ளது. 

அதேசமயம் மாற்றுக் கருத்துகள் நிலவினாலும் அரசியல் நாகரிகம் வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்கிற கருத்தும் அரசியல் நோக்கர்களால் முன்வைக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெயின் மத விழாவில் இருந்து ரூ.1 கோடி தங்கக் கலசம் திருட்டு!

வஜீா்பூா் மேம்பாலத்தில் இருந்து விழுந்து இளைஞா் காயம்

ராம்லீலா, துா்கா பந்தல் குழுக்களுக்கு இலவச மின்சாரம்: முதல்வா் அறிவிப்பு!

15 வயது சிறுவனுக்கு கத்தி குத்து: 3 சிறாா்கள் கைது!

காா், ஆட்டோ மோதல்: ஆட்டோ ஓட்டுநா் பலத்த காயம்

SCROLL FOR NEXT