தமிழ்நாடு

கம்பத்தில் போலீசார் கரைத்த விநாயகர் சிலைகள்!

DIN


கம்பம்:  தேனி மாவட்டம் கம்பத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை கம்பம் வடக்கு காவல் நிலைய போலீசார் புதன்கிழமை இரவு முல்லைப்பெரியாற்றில் விசர்ஜனம் செய்தனர்.

தேனி மாவட்டம் கம்பத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை இந்து முன்னணி மற்றும் விநாயகர் விழா குழு என இரண்டு அணிகளாக கொண்டாட அனுமதி கோரினார்.

இதில், பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கிடையே இருதரப்பிலும் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆனால், இந்து முன்னணியினருக்கு மட்டும்தான் ஊர்வலத்திற்கு அனுமதி, மற்ற அணியினருக்கு இல்லை என்றனர்.

இதன் எதிரொலியாக, விநாயகர் விழா குழுவினர் வடக்கு பகுதியில் உள்ள சுப்பிரமணியசாமி கோயில் மண்டபத்தில் ஊர்வலத்திற்கு அனுமதிக்கோரி கருப்புக் கொடி ஏந்தி உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்.

ஆனால், போலீசார் விநாயகர் சதுர்த்தி விழா குழுவினரின் 18 சிலைகளை போலீசாரை கைப்பற்றி, புதன்கிழமை இரவோடு இரவாக காமயகவுண்டன்பட்டி சாலையில் உள்ள முல்லைப்பெரியாற்றில் கரைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT