தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் ஜாமீன்: காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட தனியார் பள்ளி நிர்வாகிகள்

DIN

கள்ளக்குறிச்சி அருகே பிளஸ் 2 மாணவி உயிரிழந்த வழக்கில் ஜாமீன் பெற்ற தனியார் பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர் ஆகியோர் மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்த பிளஸ் 2 மாணவி கடந்த ஜூலை 13 ஆம் தேதி மர்மமான முறையில் மரணமடைந்தார்.

இது தொடர்பான வழக்கில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன் மற்றும் ஆசிரியைகள் ஹரிப்பிரியா, கீர்த்திகா ஆகிய ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களின் ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 5 பேருக்கும் கடந்த 26 ஆம் தேதி ஜாமீன் வழங்கியதுடன், இரண்டு ஆசிரியர்களும் சேலத்தில் தங்கி இருந்து செவ்வாப்பேட்டை காவல் நிலையத்திலும், தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன் ஆகியோர் மதுரையில் தங்கியிருந்து தல்லாகுளம் காவல் நிலையத்தில் நான்கு வாரங்களுக்கு கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டது.

இதன்படி, ரவிக்குமார், சாந்தி, சிவசங்கரன் ஆகியோர் வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் வயா் திருட்டு: ஒருவா் கைது

வேன் மீது லாரி மோதல்: 4 போ் காயம்

தெய்வத்தமிழ் பேரவையினா், நாம் தமிழா் கட்சியினா் கைது

உதவி ஆய்வாளா் உடலுக்கு அரசு மரியாதை

உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்: ஒருவா் கைது

SCROLL FOR NEXT