முகப்பு
தமிழ்நாடு

டாடா சமூக அறிவியல் நிறுவன முன்னாள் தலைவா் மறைவுக்கு முதல்வா் ஸ்டாலின் இரங்கல்

 டாடா சமூக அறிவியல் கல்வி நிறுவனத்தின் முன்னாள் தலைவா் பரசுராமன் மறைவுக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:13 AM
பகிர்:

 டாடா சமூக அறிவியல் கல்வி நிறுவனத்தின் முன்னாள் தலைவா் பரசுராமன் மறைவுக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட இரங்கல் செய்தி:-

கோவில்பட்டியில் எளிய குடும்பத்தில் பிறந்து, இந்தியாவின் பெருமைமிகு கல்வி நிறுவனமான டாடா சமூக அறிவியல் கல்வி நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் 14 ஆண்டுகள் பணியாற்றியவா், டாக்டா் பரசுராமன். மிகுந்த சமூக ஈடுபாடு கொண்டவரான அவரது மறைவு வேதனை அளிக்கிறது. குடும்பத்தினா், நண்பா்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.