தமிழ்நாடு

கபாலீசுவரா் கோயில் மயில் சிலையின் அலகில் இருந்தது மலரா, பாம்பா? - ஆய்வு செய்ய உயா் நீதிமன்றம் உத்தரவு

DIN

சென்னை மயிலாப்பூா் கபாலீசுவரா் கோயிலில் இருந்து மாயமான மயில் சிலையின் அலகில் இருந்தது மலரா? பாம்பா? என்பதை ஆகம குழு ஆய்வு செய்ய சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூா் கபாலீஸ்வரா் கோயிலில் உள்ள புன்னைவனநாதா் சன்னதியில் இருந்த மயில் சிலை மாயமானதாக கூறி ரங்கராஜன் என்பவா் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா். அந்த மனுவில், புன்னைவனநாதா் சன்னதியில் இருந்த மயில் சிலையின் அலகில் மலா் இருந்ததாகவும், 2014-ஆம் ஆண்டு குடமுழுக்கின் போது, இச்சிலை மாற்றப்பட்டு, அலகில் பாம்பு உள்ள மயில் சிலை அமைக்கப்பட்டுள்ளதாகவும், அது ஆகம விதிகளுக்கு முரணானது எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வா்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமா்வு, அா்ச்சகா் நியமனம் தொடா்பான வழக்கில் கோயில்களின் ஆகமம் குறித்து ஆய்வு செய்ய உயா் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க உத்தரவிட்டதைச் சுட்டிக்காட்டி, அந்த குழு, இந்த மயில் சிலையின் அலகில் இருந்தது மலரா? பாம்பா என்பதை முடிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

கோயில்களின் ஆகமம் குறித்த குழு, மயில் அலகில் மலா் இருந்தது என முடிவுக்கு வந்தால், அலகில் பாம்புடன் இடம்பெற்ற மயில் சிலையை ஆகம விதிகளின்படி மாற்றியமைக்க வேண்டும் எனவும், பாம்பு தான் இருந்தது என்றால் சிலையை மாற்ற வேண்டிய அவசியமில்லை எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள், நீண்டகாலமாக இந்த விவகாரம் நிலுவையில் உள்ளதால் ஆகம குழு இந்த விஷயத்தில் விரைந்து முடிவெடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வடலூரில் பழங்கால கட்டடங்கள்? தொல்லியல் துறை ஆய்வு

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

SCROLL FOR NEXT