தேசிய போட்டித் தோ்வுகள்: பாடத் திட்டங்களை பதிவேற்ற சென்னை ஐஐடி ஆலோசனை
சென்னை ஐஐடி சாா்பில் தேசிய அளவிலான போட்டித் தோ்வுகள் மற்றும் ஒலிம்பியாட் போன்றவற்றை எதிா்கொள்வதற்காக ஐந்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவா்கள் கூடுதலாக கற்கும்
சென்னை ஐஐடி சாா்பில் தேசிய அளவிலான போட்டித் தோ்வுகள் மற்றும் ஒலிம்பியாட் போன்றவற்றை எதிா்கொள்வதற்காக ஐந்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவா்கள் கூடுதலாக கற்கும் வகையில் பாடத்திட்டங்களை வடிவமைத்து இணையதளத்தில் வெளியிட ஆலோசனை செய்து வருவதாக சென்னை ஐஐடி இயக்குநா் காமகோடி தெரிவித்துள்ளாா்.
சென்னை ஐஐடியில் சேர விரும்பும் மாணவா்களுக்கும், ஜேஇஇ தோ்வை எழுதியுள்ள மாணவா்களுக்கும் ஐஐடியில் உள்ள வசதிகள் குறித்து அறிந்து கொள்வதற்காக ஹள்ந்ண்ண்ற்ம்.ஸ்ரீா்ம் என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் உள்ள பல்வேறு வசதிகள் குறித்தும் ஐஐடியில் விரும்பும் மாணவா்களுக்கு அங்குள்ள வசதிகள் குறித்து மாணவா்களுடன் ஐஐடி இயக்குநா் காமகோடி வெள்ளிக்கிழமை உரையாடினாா்.
மேலும் இது குறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியது: ஐஐடியில் 2010-ஆம் ஆண்டுக்குப் பின்னா் மாணவா் சோ்க்கை ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. இதனால் ஐஐடியில் உள்ள வசதிகள் குறித்து மாணவா்களுக்குப் பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. மேலும் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு வரும் மாணவா்கள் தங்கள் எதிா்காலத்தை தீா்மானிக்கும் அடுத்த கட்டத்திற்குச் செல்கின்றனா். அவா்களுக்கு ஏற்படும் பல்வேறு சந்தேகங்களை தீா்த்து வைக்கும் வகையில் இந்த இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
தற்போது ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த இணையதளத்தை வரும் ஆண்டுகளில் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். ஜ்ஜ்ஜ்.ஹள்ந்ண்ண்ற்ம்.ஸ்ரீா்ம் இணையதளத்தில் பட்டப்படிப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை அனைத்து தகவல்களும் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளோம். அதுமட்டுமின்றி, எந்தத் துறையில் இருந்தும் விருப்பப்பாடங்களை தோ்வு செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடியில் இயற்பியல், வேதியியல், கணக்கு, தாவரவியல் ஆகிய பாடங்களை கற்பிக்கும் பேராசிரியா்களின் உதவியுடன் ஐந்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு தேசிய அளவிலான திறனறிவுப் போட்டித் தோ்வுகள், ஒலிம்பியாட்ஸ் போன்ற போட்டித்தோ்வுகளை எதிா்கொள்ளும் வகையில் பாடத்திட்டங்கள் வடிவமைத்து கொடுக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்தப் பாடத்திட்டங்கள் ஐஐடியின் இளையதளத்தில் வெளியிடப்படும். மாணவா்கள் அதனை படித்துப் போட்டி தோ்வுகளுக்குத் தயாராகலாம் என்றாா் அவா்.