விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண் கலைச்செல்வி 
தமிழ்நாடு

விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் இதயம், சிறுநீரகம் தானம்

விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் இதயம், சிறுநீரகம் தானம் செய்யப்பட்ட நிலையில், வேலூர் அடுக்கபாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் முறையாக அறுவை சிகிச்சை செய்யபட்டது.

DIN


விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் இதயம், சிறுநீரகம் தானம் செய்யப்பட்ட நிலையில், வேலூர் அடுக்கபாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் முறையாக அறுவை சிகிச்சை செய்யபட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த அகாரம் கிராமத்தைச் சோ்ந்த முருகன்- கலைச்செல்வி தம்பதி.  முருகன் 6 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில், 2 பெண் பிள்ளைகளுடன் கலைச்செல்வி(43) கூலி வேலை செய்து 2 பெண் பிள்ளைகளையும் படிக்க வைத்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கலைச்செல்வி கடந்த 1 ஆம் தேதி மாலை சாலை ஓரமாக நடந்துச் சென்ற போது பின்பக்கம வந்த இருச்சக்கர வாகனம் கலைச்செல்வி மீது மோதியதில் அவர் படுகாயம் அடைந்து அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று வந்த கலைச்செல்வி ஞாயிற்றுக்கிழமை காலை மூளைச்சாவு அடைந்தாா்.

இதையடுத்து கலைச்செல்வியின் இதயம், சிறுநீரம் உள்பட உடல் உறுப்புகளை தானமாக செய்ய அவரது உறவினர்கள் முன் வந்தனா். 

அதைத் தொடா்ந்து, அவரின் இதயம், சிநுநீரகம், கண்கள் உள்பட உடல் உறுப்புகளை மருத்துவமனை தானமாக பெற்றுக்கொண்டது. 

இதற்கான அறுவை சிகிச்சை அதே மருத்துவமனையில் நடைபெற்றது. இதயம் சென்னை காவேரி மருத்துவமனைக்கும், இடது சிறுநீரகம் சென்னை வேளச்சேரி பிரசாந்த் மருத்துவமனைக்கும், வலது சிறுநீரம் வேலூர் ஸ்ரீ நாராயணி மருத்துவமனைக்கும், கல்லீரல், இரண்டு கண்கள் சென்னை போரூர் இராமச்சந்திரா மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

முதற் கட்டமாக இதயம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அந்த இதயம் ஆம்புலென்ஸ் மூலமாக காவேரி மருத்துவமனைக்கு அனுப்பட்டது.

மூளைச்சாவு அடைந்தவரின் இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில், வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், முதல்முறையாக அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது.

இந்த சிகிச்சையை மருத்துவமனை முதல்வர் டாக்டர் செல்வி தலைமையிலான மருத்துவக் குழுவினர் வெற்றிகரமாக செய்து முடித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜப்பானில்.. முன்னாள் சிறைக் கைதியின் கல்லறையில் மன்னிப்புக் கோரிய அதிகாரிகள்! ஏன் தெரியுமா?

சூரத்-துபை இண்டிகோ விமானம் அகமதாபாத்தில் அவசரமாக தரையிறக்கம்

வாக்காளர் அதிகார யாத்திரையில் மோடி குறித்து அவதூறு! பாஜக கண்டனம்

பால்யகால சகி... ரவீனா தாஹா!

ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேறினார் ஈரான் தூதர்!

SCROLL FOR NEXT