தமிழ்நாடு

நடராஜர் கோயிலில் செப்.9-ல் மகா ருத்ர மகாபிஷேகம்

உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் ஐம்பூதத் தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்கும் சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜ ராஜமூர்த்திக்கு வருகிற செப்.9-ம் தேதி ஸகல திரவிய மஹாபிஷேகம் நடைபெறுகிறது.

DIN

உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் ஐம்பூதத் தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்கும் சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜ ராஜமூர்த்திக்கு வருகிற செப்.9-ம் தேதி வெள்ளிக்கிழமை மஹா ருத்ர ஹோமம், ஸகல திரவிய மஹாபிஷேகம் நடைபெறுகிறது.

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் சிவகாமிசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு வருடத்திற்கு ஆறு முறை மகா அபிஷேகம் நடைபெறும். ஆவணி மாத மகாபிஷேகம் வருகிற செப்.9-ம் தேதி வெள்ளிக்கிழமை மகா அபிஷேகம் நடைபெற உள்ளது. செப்.7-ம் தேதி புதன்கிழமை காலையில் கணபதி ஹோமம் அன்று மாலை சிகாம சுந்தரி ஆனந்த நடராஜமூர்த்திக்கு அனுக்ஞை பூஜை , 8-ம் தேதி வியாழக்கிழமை காலையில்  நவகிரக ஹோமம், அன்று மாலை ஆசார்யவர்ணம், மதுபர்க்கம்  அங்குரம், பிரதிசரம், ரக்ஷா பந்தனம், ஸ்ரீதனபூஜை ஆகியவை நடைபெறுகிறது. செப்.9-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை சுவாமிக்கு விசேஷ ரகசிய பூஜை, சுவாமிக்கு லஷார்ச்சனை கட ஸ்தாபனம், மகா ருத்ர ஜபம், மகா ருத்ர ஹோமம் பின்னர் மகா தீபாராதனை நடைபெறுகிறதுய நண்பகல் வஸோர்த்தாரை ஹோமம், ஆகியவற்றைத் தொடர்ந்து மாலை மஹாபூர்ணாஹீதி,  வடுக பூஜை, கன்யா பூஜை, ஸ்வாசினி பூஜை, தம்பதி பூஜை, கோ பூஜை, கஜபூஜை, அஸ்வ பூஜை, மஹா தீபாராதனை நடைபெறுகிறது. பின்னர் மாலை 6 மணிக்கு கடயாத்ராதானம் புறப்பட்டு, கனகசபையில் ஸ்ரீமந் ஆனந்த நடராஜமூர்த்தி மற்றும் சிவகாமசுந்தரிக்கு சகல திரவிய மஹாபிஷேகம் நடைபெறுகிறது.

மகாபிஷேக ஏற்பாடுகளை  கோயில் பொது தீட்சிதர்கள் செயலாளர் சி.எஸ்.எஸ் ஹேமசபேச தீட்சிதர்  மற்றும்  பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்திலிருந்து வந்த ரசமலாய்! பாம்பே என்று பேசிய அண்ணாமலையை விமர்சித்த ராஜ் தாக்கரே

தங்கம், வெள்ளி விலை மீண்டும் அதிரடி உயர்வு

காங்கிரஸின் துரோகத்தை பராசக்தி காட்டியுள்ளது: அண்ணாமலை

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்

தெலங்கானா: 300 தெரு நாய்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் 9 பேர் மீது வழக்கு

SCROLL FOR NEXT