மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் பக்கம் மர்ம நபர்களால் முடக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சராக பதவிவகித்து வருபவர் செந்தில்பாலாஜி. இவருடை ட்விட்டர் பக்கத்தை மர்ம நபர்கள் முடக்கியுள்ளனர். முடக்கிய ட்விட்டர் பக்கத்தில் கிரிப்டோ தொடர்பான தகவல்களை மர்ம நபர்கள் பதிவிட்டுள்ளனர்.
இதுகுறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருப்பதாவது, நேற்று இரவு முதல் தனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கணினி குற்றப்பிரிவுக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே முடக்கப்பட்ட ட்விட்டர் பக்கத்தை மீட்கும் முயற்சியும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.