தமிழ்நாடு

மாணவிகளுக்கான ‘புதுமைப்பெண்’ திட்டம் நாளை தொடக்கம்

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்து உயா் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின்

DIN


தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்து உயா் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் நாளை திங்கள்கிழமை தொடக்கி வைக்கிறார். இதில் சிறப்பு அழைப்பாளராக தில்லி முதல்வா் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்கிறாா்.

தமிழக அரசின் 2022-2023-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்தாா். அதன்படி, அரசுப் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு, அவா்கள் உயா்கல்வி அல்லது பட்டயப்படிப்பு, தொழிற்படிப்பு படித்து முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்த திட்டத்திற்காக தமிழக அரசு ரூ.698 கோடி ஒதுக்கியுள்ளது.

‘புதுமைப்பெண் திட்டம்’ என பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டம் நாளை திங்கள்கிழமை முதல் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. திட்டத்தின் தொடக்க விழா சென்னை ராயபுரத்தில் உள்ள பாரதி மகளிா் கல்லூரியில் திங்கள்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. முதல்வா் மு.க.ஸ்டாலின் திட்டத்தை தொடக்கி வைக்கவுள்ளாா். இதில் சிறப்பு அழைப்பாளராக தில்லி முதல்வா் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3 நாள் டிஜிட்டல் அரெஸ்ட்: மாரடைப்பில் ஓய்வுபெற்ற மருத்துவர் மரணம்!

விழா மேடையில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்தம்! கண்கலங்கிய அர்ச்சனா!

இந்தியா-பாகிஸ்தான் மோதலில் மூன்றாம் தரப்பு தலையீடு இல்லை: ராஜ்நாத் சிங்!

பெரியாரை விமர்சிப்பவர்கள் அரசியலில் இருந்து காணாமல் போவார்கள்! - ஜெயக்குமார்

பெரியார் பிறந்தநாள்! அமைச்சர் சேகர்பாபு மரியாதை!

SCROLL FOR NEXT