கோப்புப்படம் 
தமிழ்நாடு

மதுரை - செங்கோட்டை சிறப்பு ரயில் இன்று முதல் ரத்து

மதுரை-செங்கோட்டை மற்றும் செங்கோட்டை-மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் திங்கள்கிழமை(செப்.5) முதல் 6 நாள்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

DIN


மதுரை-செங்கோட்டை மற்றும் செங்கோட்டை-மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் திங்கள்கிழமை(செப்.5) முதல் 6 நாள்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

மதுரை ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 
ரயில் பாதை பராமரிப்பு பணி காரணமாக மதுரை-செங்கோட்டை சிறப்பு ரயில்கள் திங்கள்கிழமை முதல் (செப்.6 முதல் செப்.10 வரை) 6 நாள்களுக்கு ரத்து செய்யப்படுகிறது. 

ராஜபாளையம்-சங்கரன் கோவில் பிரிவில் ரயில் பாதையை பலப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. 

இதன் காரணமாக, மதுரையில் காலை 11.30 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை-செங்கோட்டை சிறப்பு ரயில் மற்றும் செங்கோட்டையில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்பட வேண்டிய செங்கோட்டை மதுரை சிறப்பு ரயில் ஆகியவை திங்கள்கிழமை முதல் (செப்.5 முதல் ரத்து செய்யப்படுகிறது. 

வருகின்ற செப்டம்பர் 10 ஆம் தேதி வரை 6 நாள்களுக்கு சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படும் நிலையில் ரயில் பாதையை பலப்படுத்தும் பணிமுழுமையாக நிறைவடைந்த உடன் மீண்டும் ரயில் சேவை தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உக்ரைன் - ரஷியா போர்: ஒரு வாரத்தில் 25,000 வீரர்கள் பலி - டிரம்ப்

குவாஹாட்டி டெஸ்ட்: கடைசி நாளிலும் தடுமாறும் இந்தியா! 5 விக்கெட்டுகளை இழந்தது!

உருவானது சென்யார் புயல்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT