முதல்முறையாக ஸ்ரீபெரும்புதூர் ராஜிவ் நினைவிடம் செல்லும் ராகுல் காந்தி! 
தமிழ்நாடு

முதல்முறையாக ஸ்ரீபெரும்புதூர் ராஜிவ் நினைவிடம் செல்லும் ராகுல் காந்தி!

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் நினைவிடத்துக்கு நாளைதான் முதல்முறையாக காங்கிரஸ் தலைவரும் ராஜிவ் காந்தியின் மகனுமான ராகுல் காந்தி செல்கிறார்.

DIN

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் நினைவிடத்துக்கு நாளைதான் முதல்முறையாக காங்கிரஸ் தலைவரும் ராஜிவ் காந்தியின் மகனுமான ராகுல் காந்தி செல்கிறார்.

சோனியா காந்தி சென்று அஞ்சலி செலுத்தியிருந்தாலும் ராகுல் காந்தி அரசியலுக்கு வந்த பிறகு எத்தனையோ முறை தமிழ்நாடு வந்தபோதிலும் இதுவரை எப்போதும்  ஸ்ரீபெரும்புதூர் நினைவிடத்துக்குச் சென்றதில்லை.

காங்கிரஸ் எம்.பி.யானபோதிலும் சரி, பொதுச் செயலர் என பொறுப்புகளை ஏற்றபோதிலும்கூட செல்லவில்லை.

2009-ல் தமிழகத்தில் மூன்று நாள் முகாமிட்டு 50-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டபோதிலும்கூட தந்தைக்கு அஞ்சலி செலுத்த அவர் மறைந்த ஸ்ரீபெரும்புதூர் நினைவிடம் சென்றதில்லை.

முதல்முறையாக  இப்போதுதான், இந்தியாவை ஒருங்கிணைப்போம் என்ற முழக்கத்துடன் காங்கிரஸ் நடத்தும் அகில இந்திய  நடைப் பயணத்தைத் தொடக்கிவைக்கத் தமிழகம் வரும் ராகுல் காந்தி, முன்னதாக நாளை புதன்கிழமை  காலை, ஸ்ரீபெரும்புதூர் சென்று தந்தை ராஜிவ் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தவுள்ளார்.

தந்தையின் நினைவிடத்தில் தியானம் செய்யும் ராகுல் காந்தி, பின்னர் சென்னை திரும்பி, திருவனந்தபுரம் வழியாக கன்னியாகுமரிக்குப் புறப்பட்டுச் செல்கிறார்.

எதிர்வரும் மக்களவைத் தேர்தலை மனதில்வைத்து அகில இந்திய அளவிலான பிரசாரத்துக்கான உத்தியாக இந்த நடைப்பயணத்தை காங்கிரஸ் திட்டமிடுகிறது. கன்னியாகுமரியில் தொடங்கி ஸ்ரீீநகர் வரையில் நடைபெறவுள்ள இந்த பயணத்தில் நாட்டின் பல்வேறு மாநிலங்களின் வழியாக 3,570 கி.மீ. தொலைவை இந்தக் குழுவினர் கடந்துசெல்வார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நகையை பறித்து தப்பிச்சென்றபோது கார் மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் பலி, 8 பேர் காயம்

21 ரன்களில் மிகப் பெரிய சாதனையை தவறவிட்ட ஷுப்மன் கில்!

உள்ளிருந்தும் ஒளிர்கிறேன்... கமல் பதிவு!

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

மஞ்சள் முகமே... ஸ்ரீமுகி!

SCROLL FOR NEXT