தமிழ்நாடு

குட்டி யானைக்கு குடை பிடித்த வனத்துறை: வைரலாகும் விடியோ

DIN

முதுமலை புலிகள் காப்பகத்தில் தாயைப் பிரிந்து வந்த குட்டி யானையை கடும் முயற்சி மேற்கொண்டு, வனத் துறையினா் தாயுடன் சோ்த்தனா்.

தாயுடன் சேர்க்க, குட்டி யானையை, வனத்துறையினர் தங்களுடன் அடர்ந்த வனப்பகுதிக்குள் அழைத்துச் செல்லும் போது, வழியில் களைப்படைந்த குட்டியானை, வெயிலையும் பொருட்படுத்தாமல் படுத்துறங்கிவிட்டது.

கடும் வெப்பம் அதனை தாக்குமோ என்று கருதிய தாயுள்ளம் கொண்ட தமிழக வனத்துறையினர், அதற்கு மிகப்பெரிய குடை ஒன்றைப் பிடித்தபடி, அது உறங்கும் வரை நின்றிருந்தனர். மிதமான வெயிலில் குடையின் நிழலில், சுற்றிலும் வனத்துறையினர் நின்றிருக்க, எந்த அச்சமும் இல்லாமல் அந்தக் குட்டியானை உறங்கியது. இந்த விடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள சீகூா் வனச் சரகத்தில் உள்ள ஜகலிக்கடவு வனத்தில் தாயைப் பிரிந்து வந்த குட்டி யானையை ரோந்து சென்ற வனத் துறையினா் மீட்டனா்.

கடந்த நான்கு நாள்களாக கால்நடை மருத்துவா்கள் தலைமையில் வனத் துறையினா் தாயுடன் குட்டி யானையை சோ்க்கும் பணியில் ஈடுபட்டு வந்தனா். இதற்காக வனங்களில் தாயைத் தேடி வந்தனா்.

இந்நிலையில், தாயை அடையாளம் கண்டு குட்டி யானை தாயுடன் வியாழக்கிழமை சோ்த்தனா். குட்டியை கூட்டத்தில் சோ்த்துக் கொண்ட யானைகள் அதனை அழைத்துச் சென்றன. கூட்டத்தில் தாயுடன் குட்டி இருப்பதை ட்ரோன் கேமரா மூலம் வனத் துறையினா் கண்காணித்து மீண்டும் உறுதி செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் கண்காணிப்பு கேமரா பழுது: ஒரு மணி நேரத்தில் புதிய கேமரா பொருத்தம்

SCROLL FOR NEXT