தமிழ்நாடு

சேலத்தில் வழக்கமான உற்சாகத்துடன் ஓணம் பண்டிகை: ஆடிப்பாடி மகிழ்ச்சி

DIN

சேலம்: சேலத்தில் வழக்கமான உற்சாகத்துடன் ஓணம் பண்டிகைக் கொண்டாடப்பட்டது. சேலத்தில் உள்ள கேரள மக்கள் வீட்டு வாசலில் அத்தப்பூக் கோலம் வரைந்து ஆடிப்பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கேரள மாநில  மக்களின் மிகவும் முக்கிய பண்டிகையாக கொண்டாடப்படுவது திருவோணம்.

இந்தப் பண்டிகை கேரள மாநிலத்தில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் உள்ள கேரள மக்களால் அந்தந்த மாநிலங்களில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன்படி சேலத்தில் ஓணம் திருவிழா களைகட்ட தொடங்கியுள்ளது. சேலத்தில் வசிக்கும் கேரள மக்கள் புத்தாடை அணிந்து ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள்.

சேலம் தமிழ்ச்சங்கம் அருகே உள்ள கேரள சமாஜத்தில் ஒன்று கூடிய கேரள பெண்கள் வண்ண வண்ண பூக்களை கொண்டு அத்தப்பூ கோலம் வரைந்து தீபம் ஏற்றி வழிபட்டனர்.

தொடர்ந்து கோலத்தைச் சுற்றிலும் ஆடல் பாடல் பாடி கும்மி அடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து அனைவருக்கும் அறுசுவையுடன்  உணவு வழங்கப்பட்டது.

இதேபோல் சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள கேரள மக்கள் ஓணம் பண்டிகையை மிகவும் விமர்சையாக கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

விடியோவுக்கு: இங்கே க்ளிக் செய்யவும்..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் ஆதிசங்கரா் ஜெயந்தி மகோற்சவம் நிறைவு

ஐபிஎல் தொடருக்குப் பின் எம்.எஸ்.தோனியின் 7 நிமிட விடியோ!

மீண்டும் ஆட்சிக்கு வந்தால்... நவீன் பட்நாயக்கின் முதல் உத்தரவு!

கால் முளைத்த நிலவு! ஜான்வி கபூர்..

பந்துவீச்சில் மிரட்டிய கேகேஆர்; 159 ரன்களுக்கு ஆட்டமிழந்த சன்ரைசர்ஸ்!

SCROLL FOR NEXT