அரசுப் பள்ளியில் குடற்புண் மாத்திரை சாப்பிட்ட 50-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு மயக்கம்: மருத்துவமனையில் அனுமதி!
ஆத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று அரசு சார்பில் வழங்கப்பட்ட குடற்புண் மாத்திரை சாப்பிட்ட ஐம்பதுக்கு மேற்பட்ட மாணவிகள் மயக்கமடைந்தனர்.
சேலம்: ஆத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று அரசு சார்பில் வழங்கப்பட்ட குடற்புண் மாத்திரை சாப்பிட்ட ஐம்பதுக்கு மேற்பட்ட மாணவிகள் மயக்கமடைந்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட குடற்புண் மாத்திரை 2400 மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.
மாத்திரை சாப்பிட்ட மாணவிகளுக்கு சில மணி நேரங்களிலேயே மயக்கம் ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
மேலும், மாணவிகளுக்கு மருத்துவர்கள் தீவிர பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அரசு சார்பில் வழங்கப்பட்ட குடற்புண் மாத்திரை சாப்பிட்ட 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஆத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.