தமிழ்நாடு

பிரிட்டன் அரசி எலிசபெத் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

DIN


சென்னை: பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில்,  பிரிட்டனின் மிக நீண்ட காலம் ஆட்சியில் இருந்த மாட்சிமை தங்கிய இராணி இரண்டாம் எலிசபெத் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.

எழுபது ஆண்டுகள், 15 பிரதமர்கள் மற்றும் நவீன வரலாற்றில் பல முக்கியத் திருப்புமுனைகளைக் கண்ட ஓர் ஆட்சிக்குப் பிறகு, இராணி இரண்டாம் எலிசபெத் அவர்களின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது.

இராணி இரண்டாம் எலிசபெத் அவர்கள் தனது பொது வாழ்க்கையில் கடைப்பிடித்த கண்ணியம் மற்றும் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்காக நீண்ட காலம் நினைவுகூரப்படுவார். வரலாற்றில் சிறந்த முடியாட்சியர்களில் ஒருவரான இராணி இரண்டாம் எலிசபெத் அவர்களின் மறைவினால் வாடும், இங்கிலாந்து அரசக் குடும்பத்தினர், இங்கிலாந்து மக்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூரில் ஆடிப்பெருக்கு பாதுகாப்பு பணிகள் தீவிரம்

ஏரியில் மூழ்கிய தொழிலாளியை தேடும் பணி தீவிரம்

சாலையில் கிடந்த கைப்பேசியை போலீஸில் ஒப்படைத்த இளைஞா்!

தேசிய மோட்டாா் பைக் பந்தயம்: சா்தக், ஜகதீஸ்வரி சிறப்பிடம்

ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு!

SCROLL FOR NEXT