முகப்பு
தமிழ்நாடு

இறப்பிலும் இணைபிரியாத தம்பதி... கணவன் இறந்த துக்கத்தில் உயிர் துறந்த மனைவி

குடியாத்தம் அடுத்த கௌதம்பேட்டை பகுதியில் கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Updated On : 11 செப்டம்பர், 2022 at 6:44 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:47 PM

குடியாத்தம் அடுத்த கௌதம்பேட்டை பகுதியில் கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கௌதம்பேட்டை பகுதியில் சேகர் (65) கூலி வேலை செய்து வந்தார். இவரது மனைவி அஞ்சலி (60) இவர்களுக்கு  இரண்டு ஆண் மற்றும் பெண் பிள்ளைகள் உள்ள நிலையில் தனது மகன்கள் உடன் சேகர் மற்றும் அவரது மனைவி அஞ்சலி ஆகியோர் வசித்து வந்தனர்.

இதனிடையே கடந்த சில நாள்களாக  சேகருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு சனிக்கிழமை உயிரிழந்த நிலையில், அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி அஞ்சலி அவரது உடலுக்கு அருகே அமர்ந்து அழுதபடி இருந்துள்ளளார்.

Advertisement

இதனிடையே  ஞாயிற்றுக்கிழமை காலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கணவர் சேகரின் உடலுக்கு அருகே மயங்கி விழுந்துள்ளார்.

உடனடியாக அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்ற நிலையில் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை அடுத்து அஞ்சலி உடலும் அவரது கணவர் சேகரின் உடலுக்கு அருகில் வைக்கப்பட்டது.

மேலும், கணவன் உயிரிழந்த துக்கம் தாலாமல் மனைவி உயிரிழந்த சம்பவம் அவர்களது உறவினர்களிடையே  சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கணவன் மற்றும் மனைவி ஆகியோரின் உடல்கள் அலங்கரிக்கப்பட்ட ஒரே பல்லக்கில் வைத்து இறுதி ஊர்வலம் நடத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.