தமிழ்நாடு

காஞ்சிபுரத்தில் கொடூரம்... மதுபோதையில் அண்ணனைக் கொலை செய்த தம்பி கைது

காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதி திருவேகம்பன் நகரில் மதுபோதையில் ஞாயிற்றுக்கிழமை அண்ணனைக் கொலை செய்த தம்பியை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

DIN

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதி திருவேகம்பன் நகரில் மதுபோதையில் ஞாயிற்றுக்கிழமை அண்ணனைக் கொலை செய்த தம்பியை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதி திருவேகம்பன் நகரில் வசித்து வருபவர் செல்வராணி. தனியார் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வரும் இவரது கணவர் பிரபுதாஸ் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் காலமாகி இருந்தார். இவர்களுக்கு கல்லூரியில் 3 ஆம் ஆண்டு பயிலும் வின்சென்ட்(23) என்ற மகனும், தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் ஷெர்லி ஜான்(19) என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். 

இந்த நிலையில் ஷெர்லி ஜான் மதுபோதைக்கு அடிமையாகி இருந்தார். சம்பவ நாளன்று குடிபோதையில் இளைய மகன் ஷெரிலி ஜான் தாயார் செல்வராணியை தாக்கிய போது மூத்த மகனான வின்சென்ட் இதை தட்டிக் கேட்டுள்ளார்.

இதனால் இருவருக்கிடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் மது போதையில் ஆத்திரமடைந்த தம்பி அண்ணனை கத்தியால் குத்தியதில் சம்பவ இடத்திலேயே வின்சென்ட் உயிரிழந்தார்.

தகவலறிந்து காஞ்சிபுரம் தாலுகா போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து ஷெர்லிஜானை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விசிலடித்த ரசிகரைக் கண்டித்த அஜித்!

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராகப் போராடுவோம்! தடை செய்ய வலியுறுத்தல்

மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு மேம்பட்டுள்ளது: பிரேன் சிங்

ஓஜி ஓடிடி தேதி!

முதல்முறையாக ஃபிஃபா உலகக் கோப்பைக்குத் தேர்வான ஆப்பிரிக்க நாடு..! 5 லட்சம் மக்கள் தொகை!

SCROLL FOR NEXT