தமிழ்நாடு

கல்பாக்கம் சிலம்ப வீரர்கள் 6 தங்கப்பதக்கம் வென்று சாதனை

புதுதில்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் கல்பாக்கம் சிலம்பக்கலை வீரர்கள் 7 விதமான போட்டிகளில் வெற்றி பெற்று 6 தங்கப்பதங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். 

DIN


புதுதில்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் கல்பாக்கம் சிலம்பக்கலை வீரர்கள் 7 விதமான போட்டிகளில் வெற்றி பெற்று 6 தங்கப்பதங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். 

புதுதில்லியில் தேசிய அளவிலான 7 விதமான சிலம்பக்கலை போட்டிகள் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு, புதுச்சேரி, ஹரியாணா, பஞ்சாப், புதுதில்லி, உத்தரப்பிரதேசம், கர்நாடகம், கேரளம், குஜராத், ஆந்திரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சிலம்பக்கலை வீரர்கள் பற்கேற்றனர். 

3 பிரிவாக நடத்தப்பட்ட 7 விதமான சிலம்பப் போட்டிகளில் பங்கேற்ற கல்பாக்கம் சிலம்பக்கலை வீரர்கள் பிரபு, இனியராஜ், கார்த்திக் பெருமாள், கணேசன், தில்லிகுமார், மதன்குமார் ஆகியோர் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று 6 தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தனர். 

அதேபோல் மற்ற வீரர்கள் பங்கேற்ற வீரர்கள் 4 வெள்ளி, 3 வெண்கலம் பதக்கம் வென்றனர். 

பதக்கங்களை வென்று கல்பாக்கம் திரும்பிய சிலம்பக்கலை வீரர்களுக்கு அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்து வாழ்த்து தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!

பிராட்வே பேருந்து நிலையம் மறுசீரமைப்பு: இன்று முதல் ராயபுரம், தீவுத்திடலில் இருந்து பேருந்து இயக்கம்!

தமிழகத்தில் இன்றும் நாளையும் மழை பெய்யும்! சென்னையிலும்...

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!

சிப்காட் நவசபரி ஐயப்பன் கோயிலில் நாளை மகா கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT