தமிழ்நாடு

சித்தரிக்கப்படாத ரியல் ஹீரோ வைகோ: முதல்வர் புகழாரம்

DIN

திரைப்படத்தில் வரும் ஹீரோ போன்று இல்லாமல் ரியல் ஹீரோ வைகோ என புகழாரம் சூட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின், வைகோ உணர்ச்சி மிக்க போராளி, உயரத்தில் மட்டுமல்ல லட்சியத்திலும், தியாகத்திலும் உயர்ந்தவர் என கூறினார்.

மதிமுக பொதுச்செயலாளா் வைகோவின் 56 ஆண்டுகால வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் ‘மாமனிதன் வைகோ’ என்ற தலைப்பிலான ஆவணப்படும் தயாரிக்கப்பட்டுள்ளது.

சென்னை சத்யம் திரையரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு 'மாமனிதன் வைகோ' என்ற ஆவணப்படத்தை வெளியிட்டரார்.

விழாவில் துரை.வைகோ, கே.எஸ்.அழகிரி, நல்லகண்ணு, திருமாவளவன், கி.வீரமணி, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், காதர் மொய்தீன், வேல்முருகன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், திரைப்படத்தில் வரும் ஹீரோக்கள் சித்தரிக்கப்பட்டவர்கள். ஆனால், சித்தரிக்கப்படாத ரியல் ஹீரோ வைகோ என குறிப்பிட்டார். 

மேலும், ரியல் ஹீரோ மட்டுமல்ல, எழுச்சிமிக்க, உணர்ச்சி மிக்க போராளி வைகோ. உயரத்தில் மட்டுமல்ல லட்சியத்தில், தியாகத்தில் உயர்ந்தவர் வைகோ என புகழாரம் சூட்டினார்.

மாணவரணியில் இருந்தபோது வைகோவிடம் தேதி கேட்டு கூட்டம் நடத்தியவன் நான். 

நெருக்கடி காலத்தில் சிறைகளில் இருந்த அனைவருக்கும் வைகோ கடிதங்கள் எழுதி உற்சாகப்படுத்தினார். 

பொடாவில் கைதாகி சிறையில் இருந்த வைகோ, குகையில் இருந்த சிங்கம் போல் இருந்தார்.
கருணாநிதி சொல்லியனுப்பினார் என்ற போது, படித்து பார்க்காமலே, தொகுதி உடன்பாட்டு ஒப்பந்த்தில் கையெழுத்திட்டவர் வைகோ. 

பிரசாரக்கூட்டங்கள், மாநாடுகளில் உணவு நேரத்தில் தான் பேசுவார் வைகோ. அப்போது தான் கூட்டம் கலையாது என கூறினார்.

உரை வீச்சால் அரசியலின் ஆழத்தையும், நெடும்பயணங்களால் தமிழ்நாட்டையும் அளந்தவர். 

திராவிடப் போர்வாள் எனச் செருக்களத்தில் கொள்கைப் பகைவர் கூட்டத்தை எதிர்ப்பவர். அண்ணன் வைகோ அவர்களது வாழ்க்கைப் பயணத்தைத் திரையில் கண்டு மகிழ்ந்தேன். 

வைகோவின் அரசியல் வாழ்வை பேசுவதற்கு நேரமில்லை என்றவர், அவரது வாழ்க்கையை பேசிக்கொண்டே செல்லலாம். 

வைகோவின் வாழ்க்கை பற்றிய ஆவணப்படத்தை உருவாக்கித் தந்துள்ள துரை வைகோவை எவ்வளவு பாராட்டினாலும் தகும். 

கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தபோது, அவரைப் பார்க்க வந்த வைகோவை கருப்புத்துண்டை வைத்து கருணாநிதி அடையாளம் கண்டுகொண்டார். 

மேலும், கருணாநிதியிடம் உங்களுக்கு பக்கபலமாக இருந்தது போல், ஸ்டாலினுக்கும் இருப்பேன் என வைகோ கூறினார். அதேபோல், வைகோவுக்கு துணையாக நானும் இருப்பேன். அவரது உடல் நலன் எனக்கு மட்டும் இல்லை இந்த நாட்டுக்கே முக்கியம். அதனால் தான் மக்களவை தேர்தலில் போட்டியிடாமல் மாநிலங்களவை செல்லுங்கள் என கூறினேன் என கூறிய ஸ்டாலின், எனது விருப்பத்தை கேட்டு கொண்டதற்கு வைகோவிற்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT