முகப்பு
தமிழ்நாடு

சீர்காழியில் திரௌபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

சீர்காழியில் இன்று காலை நடைபெற்ற திரௌபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:18 AM
பகிர்:

சீர்காழி: சீர்காழியில் இன்று காலை நடைபெற்ற திரௌபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி திருகோலக்காவில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த  திரௌபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. வேண்டுவோருக்கு வேண்டிய மாத்திரத்திலேயே அருள் புரியும் இந்த திரௌபதி அம்மன் கோயிலின் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 9 ஆம் தேதி பூர்வாங்க பூஜையும், 10 ஆம் தேதி யாகசாலை பிரவேசம் மற்றும் முதல் கால பூஜையும் தொடங்கியது. இன்று காலை 4 ஆம் கால யாக சாலை பூஜைகள் முடிவடைந்து, பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. 

Advertisement

இதைத் தொடர்ந்து யாக சாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு மல்லாரி வாத்தியம் முழங்க கோயிலை வலம் வந்து விமானத்தை அடைந்தது. காலை 7:10 மணிக்கு சிவாச்சாரியார்கள், வேத மந்திரம் ஓத கடத்தில் இருந்து புனித நீரை கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். 

இதைத் தொடர்ந்து, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. யாகசாலை பூஜைகள் மற்றும் கும்பாபிஷேகத்தை கார்த்திகேய சிவாச்சாரியார் தலைமையிலானோர் செய்து வைத்தனர். கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் செய்யப்பட்டது. 

கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை சீர்காழி நகர வர்த்தகர்கள் சங்க தலைவர் சிவசுப்பிரமணியன்  தலைமையிலானோர் செய்திருந்தனர். கும்பாபிஷேகத்தை ஒட்டி காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments