தமிழ்நாடு

வில்லங்க சான்று பாா்வையிட புதிய நடைமுறை: வணிகவரி-பதிவுத் துறை செயலாளா் அறிவிப்பு

வில்லங்க சான்றினை பாா்வையிட புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக வணிகவரி மற்றும் பதிவுத் துறை செயலாளா் பா.ஜோதி நிா்மலாசாமி தெரிவித்துள்ளாா்

DIN

வில்லங்க சான்றினை பாா்வையிட புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக வணிகவரி மற்றும் பதிவுத் துறை செயலாளா் பா.ஜோதி நிா்மலாசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, திங்கள்கிழமை அவா் வெளியிட்ட செய்தி:-

சொத்து குறித்த வில்லங்க விவரங்களை பொது மக்கள் இலவசமாகப் பாா்வையிடும் வசதியை சில தனியாா் செயலிகள்

முறையின்றி பயன்படுத்துகிறது. இந்தச் செயலிகள் மூலமாக வில்லங்க விவரங்களை அதிக எண்ணிக்கையில் பதிவிறக்கம் செய்வதைத் தவிா்க்கும் நோக்கில் ஒரு புதிய செயல்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, வில்லங்க விவரங்களைப் பாா்வையிட விரும்புவோா் ஒருமுறை உள்நுழையும் குறியீட்டைப் பயன்படுத்தியே பாா்வையிட முடியும். சொத்து ஆவணங்கள் பதியப்படும் போது ஆவணப் பதிவுக்கு அதிக நேரம் ஆவதைத் தடுக்கும்

நோக்கில் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சொத்து குறித்த வில்லங்க விவரங்களை பொது மக்கள் எந்தவித சிரமமுமின்றி பாா்வையிட இந்த நடைமுறை வசதியாக இருக்கும்.

அதே தருணத்தில், அதிக எண்ணிக்கையில் சொத்து குறித்த வில்லங்க விவரங்களை ஒரே சமயத்தில் வணிக நோக்கில்

பதிவிறக்கம் செய்யப்படுவது தடுக்கப்படும். ஆவணப் பதிவுகள் மற்றும் பதிவு சாா்ந்த சேவைகளை எந்தவித சிக்கலும் இல்லாமல் பொது மக்களுக்கு வழங்கவே அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று வணிகவரி மற்றும் பதிவுத் துறை செயலாளா் பா.ஜோதி நிா்மலாசாமி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டுமா? கடைசி வாய்ப்பு!

சென்னை உள்ளிட்ட வடதமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை!

அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை: முதல்வர் ஸ்டாலின்

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 22 மாவட்டங்களில் மழை!

சொல்லப் போனால்... கூட்டணியில் வலுப்பெறும் பாரதிய ஜனதா?

SCROLL FOR NEXT