தமிழ்நாடு

எடுக்காத பணத்திற்கு எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி: ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை முயற்சி

DIN

எடுக்காத பணத்திற்கு எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்ததாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

கோவை: கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இவர்  ஒரு வாரத்திற்கு முன் கனரா வங்கி ஏடிஎம்-ல் (இவரது பேங்க் இந்தியன் பேங்க்)  2500 ரூபாய் பணம் எடுக்க முயன்றுள்ளார். 

அப்போது பணம் வராமல் இவரது கணக்கில் இருந்து எடுக்கப்பட்டு விட்டதாக குறுஞ்செய்தி வந்துவிட்டது. இதனையடுத்து வடவள்ளி பகுதியில் உள்ள இந்தியன் வங்கிக்கு சென்று மேலாளரிடம் கேட்ட போது உரிய விளக்கம் அளிக்காமல் அழைக்கழித்ததாக கூறப்படுகிறது. பல முறை கேட்டும் எவ்வித விளக்கம் அளிக்கபடாமல் வங்கி கணக்கிற்கு பணம் மீண்டும் வராமல் இருந்ததால் மன உளைச்சலான இவர், இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இது குறித்து மனு அளிக்க வந்தார். 

அப்போது திடீரென ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டே இருந்த காவலர்கள் உடனடியாக அவரிடம் இருந்து மண்ணெனையை பிடுங்கி விசாரித்து விட்டு ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இதனால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் தக் லைஃப்!

பிளஸ்2 பொதுத்தேர்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் 23,401 பேர் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

SCROLL FOR NEXT