தமிழ்நாடு

லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் எதுவும் கைப்பற்றபடவில்லை: எஸ்.பி.வேலுமணி

லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் எதுவும் கைப்பற்றபடவில்லை என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

DIN

லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் எதுவும் கைப்பற்றபடவில்லை என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி மீதான மாநகராட்சி ஒப்பந்த முறைகேடு வழக்கில், அவரது வீடு உள்ளிட்ட 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடைபெற்றது.

தமிழகத்தில் இன்று முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி மற்றும் சி. விஜயபாஸ்கர் வீடு உள்பட 39 இடங்களில் சோதனை நடைபெற்றது.

பல்வேறு ஊழல் வழக்கு மற்றும் ஒப்பந்தங்களில் முறைகேடு என ஏற்கனவே இரண்டுமுறை வேலுமணியின் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்ட நிலையில்  இன்று மூன்றாவது முறையாக இந்த சோதனை நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனைக்கு எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களுக்கு தெரிவித்ததாவது:

சோதனையில் எதுவும் கைப்பற்றபடவில்லை. பழிவாங்கும் நோக்கத்தில் இந்த சோதனை நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமிக்கு உறுதுணையாக இருப்பதால் இந்த சோதனை நடைபெற்றது என்று முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆப்கனில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 7 பேர் பலி, 150 பேர் காயம்!

இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்! மீனவர்கள் 35 பேர் கைது

புதிய பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தம்பதியை தாக்கியதாக 4 போ் மீது வழக்கு

கூலித் தொழிலாளிக்கு ரூ. 1.60 கோடி வரிஏய்ப்பு செய்ததாக ஜிஎஸ்டி நோட்டீஸ்

SCROLL FOR NEXT