குடியிருப்பு பகுதியில் உலா வரும் காட்டுயானைகள் 
தமிழ்நாடு

கூடலூர் அருகே காட்டுயானைகள் குடியிருப்பு பகுதியில் உலா: கிராமத்தினா் அச்சம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள பாடந்தொரை மற்றும் செலுக்காடி பகுதிகளில் காட்டுயானைகள் கூட்டம் கூட்டமாக உலவுவதால் மலைக் கிராமத்தினா் அச்சமடைந்துள்ளனா்.

DIN


கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள பாடந்தொரை மற்றும் செலுக்காடி பகுதிகளில் காட்டுயானைகள் கூட்டம் கூட்டமாக உலவுவதால் மலைக் கிராமத்தினா் அச்சமடைந்துள்ளனா்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள பாடந்தொரை மற்றும் செலுக்காடி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு காட்டுயானைகள் கூட்டம் கூட்டமாக உருக்கு மத்தியில் உள்ள சாலைகளில் நடந்து சென்றன.

இதனால் இரவு நேரங்களில் வெளியூர் சென்று வீடு திரும்புவர்களுக்கு இது பெரிய சவாலாக உள்ளது. இதனால் அந்த பகுதிகளில் இரவு நேரங்களில் மக்கள் வெளியே வர அச்சப்படுகின்றனர். 

குட்டிகளுடன் வரும் யானைகள் குட்டிகளை பாதுகாக்க சாலையில் வரும் வாகனங்களை தாக்கி சேதப்படுத்துகின்றன. இதனால் அந்த சாலைகளில் செல்ல வாகன ஒட்டிகளும் அச்சப்படுகின்றனர்.

எனவே, வனச்சரகத்தினா் மலைக்கிராமத்தில் முகாமிட்டு குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் காட்டுயானைகள் கூட்டத்தை அடா்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைக் கிராமத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காத்மாண்டுவில் கனமழை: 3 நாள்களுக்கு வாகனப் போக்குவரத்துக்குத் தடை!

சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வில் முன்னணியில் எஸ்.ஏ. கல்விக் குழுமம்!

கடலோர காவல் படைக்கு புதிய ரோந்துக் கப்பல் அர்ப்பணிப்பு!

பிகாரில் இளைஞர்களுக்கு ரூ.62,000 கோடி திட்டங்கள்: பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்!

கூட்ட நெரிசல் விபத்துகளைத் தவிர்ப்பதிலும் இந்தியாவுக்கே தமிழ்நாடு வழிகாட்டும்! - முதல்வர் உறுதி

SCROLL FOR NEXT