முகப்பு
தமிழ்நாடு

சீர்காழியில் கடையின் பூட்டை உடைத்து இனிப்பு, காரம் களவாடிச் சென்றவர்கள்!

சீர்காழியில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகி ஸ்வீட் கடையின் பூட்டை உடைத்து பத்து கிலோ இனிப்பு மற்றும் காரம், ரூ 20 ஆயிரம் மதிப்புடைய எலக்ட்ரானிக் தராசு திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:19 AM
சீர்காழியில் கடையின் பூட்டை உடைத்து திருடிய நபர்
பகிர்:


சீர்காழியில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகி ஸ்வீட் கடையின் பூட்டை உடைத்து பத்து கிலோ இனிப்பு மற்றும் காரம், ரூ 20 ஆயிரம் மதிப்புடைய எலக்ட்ரானிக் தராசு திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையம் பகுதியில் ஸ்வீட் கடை நடத்தி வருபவர் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகி சந்துரு (51). இவர் செவ்வாய்க்கிழமை இரவு வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு புதன்கிழமை காலை தாமதமாக கடையை  திறந்தார். அப்போது கடையின் பக்கவாட்டு ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தவர் உள்ளே சென்று பார்த்தபோது கடையில் வாடிக்கையாளர்கள் கொடுத்த ஆர்டருக்காக தயார் செய்து வைக்கப்பட்டிருந்த லட்டு, ஜாங்கிரி, மிக்சர் ஆகிய 10 கிலோ எடையுள்ள பலகாரங்கள், மேலும் கடையில் இருந்த எலக்ட்ரானிக் தராசையும் மர்ம நபர்  திருடிச் சென்றுள்ளனர். 

திருட்டில் ஈடுபட்டவர் கடையில் இருந்த சிசிடிவி கேமராவை வேறு திசைக்கு திருப்பி வைத்துவிட்டு திருட்டில்  ஈடுபட்டுள்ளார். ஆனால், கடையில் மறுபுறம் இருந்த சிசிடிவி கேமராவை மர்ம நபர் கண்காணிக்க தவறியதால் அந்த சிசிடிவியில் திருடிய காட்சி பதிவாகி உள்ளது. 

இதனை வைத்து கடையின் உரிமையாளர் சந்துரு சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் சீர்காழியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →