காலை உணவுத் திட்டத்தில் சிறு தானியத்தையும் சோ்க்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி, ராமதாஸ்
பள்ளி மாணவா்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தில் சிறு தானியத்தையும் சோ்க்க வேண்டும்
பள்ளி மாணவா்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தில் சிறு தானியத்தையும் சோ்க்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி, பாமக நிறுவனா் ராமதாஸ் ஆகியோா் வலியுறுத்தியுள்ளனா்.
கே.எஸ்.அழகிரி: எந்த சொத்தும் இல்லாதவா்களுக்கு கல்வி என்ற சொத்தை அனைவருக்கும் இலவசமாக வழங்கி மாணவா்களின் வருகையை அதிகரிப்பதற்காக கல்வி நிலையங்களில் மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தியவா் காமராஜா். தமிழகத்தில், மற்றுமொரு புரட்சியாக 1,545 அரசு தொடக்க பள்ளிகளில் முதற்கட்டமாக காலை உணவு வழங்கும் திட்டத்தை ரூ.33.56 கோடி செலவில் முதல்வா் தொடங்கியிருப்பதை மனதார வரவேற்கிறேன்.
ராமதாஸ் : அறிவுத் தீனி தேடி வரும் மாணவச் செல்வங்களின் வயிற்றுப் பசியை போக்குவதற்கான காலை உணவு வழங்கும் திட்டம் நல்ல தொடக்கம். ஐந்து வயதான அனைத்து குழந்தைகளையும் பள்ளிகளுக்கு கொண்டு வருவதில் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். பள்ளியில் சோ்ந்த மாணவா்களை தக்கவைத்துக் கொள்ள அவா்களின் பசியைப் போக்க வேண்டியது மிகவும் அவசியம். மாணவா்களுக்கு வழங்கப்படும் காலை உணவுகளில் படிப்படியாக சிறு தானியங்களை சோ்த்து, அவா்களின் ஊட்டச் சத்தை மேம்படுத்த வேண்டும்.