ஆம்பூரில் விபத்தில் இறந்த சகோதரிகள் ஜெயஸ்ரீ-வர்ஷா 
தமிழ்நாடு

ஆம்பூரில் சோகம்... கண்டெய்னர் லாரி மோதி பள்ளிக்குச் சென்ற சகோதரிகள் பலி

ஆம்பூரில் கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் பள்ளிக்குச் சென்ற சகோதரிகள் சம்பவ இடத்திலேயே வியாழக்கிழமை பலியான சம்பவம் அந்த பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

DIN


ஆம்பூர்:  ஆம்பூரில் கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் பள்ளிக்குச் சென்ற சகோதரிகள் சம்பவ இடத்திலேயே வியாழக்கிழமை பலியான சம்பவம் அந்த பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் ஊராட்சி குமாரமங்கலம் கூட்டு ரோடு பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி (47). இவர் பிளாஸ்டிக் கதவு, ஜன்னல்கள் செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி அனுராதா  (40). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ள்னர். முதல் மகள் ஜெயஸ்ரீ (18) பிளஸ் 2 படிக்கிறார். 2ஆவது மகள் வர்ஷா (11)  6 ஆம் வகுப்பு படிக்கிறார். இருவரும் ஆம்பூர் கோவிந்தபுரம் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்து வருகின்றனர். இருவரும் தினசரி பள்ளி வாகனம் மூலம் பள்ளி சென்று வந்துள்ளனர். சம்பவத்தன்று இவர்கள் இருவரும் பள்ளி வாகனத்தை தவற விட்டதால் தண்டபாணி தனது இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் சென்றார்.  

ஆம்பூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியருகே சென்றபோது ஓசூரில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற கனரக கண்டெய்னர் லாரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தடுப்புகளை இடித்துக் கொண்டு தாறுமாறாக ஓடி தண்டபாணி மீது மோதியது. அவர் படுகாயம் அடைந்தார். வாகனத்தில் பின்புறம் உட்கார்ந்திருந்த சகோதரிகள் இரண்டு பேரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

இது குறித்து ஆம்பூர் நகர காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறனர். 

காயமடைந்த தண்டபாணி ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

ஆக. 12-ல் தே.ஜ.கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் அறிவிக்க வாய்ப்பு!

கருப்பு புறா... பிரியங்கா மோகன்!

சத்தீஸ்கரில்.. ரூ.8 லட்சம் சன்மானம் அறிவித்து தேடப்பட்ட நக்சல் கைது!

ஆணவக் கொலைகளை திருமா ஆதரிக்கிறாரா?திமுகவை விமர்சிக்கத் தயங்குவது ஏன்? தமிழிசை கேள்வி!

SCROLL FOR NEXT